உங்க மகன.. மட்டும் அரசியலுக்கு கொண்டு வருவது நியாயமோ? - ஓபிஎஸ்சை கிண்டலடிக்கும் தினகரன்!
ஊருக்கு ஒரு நியாயம்? உமக்கு ஒரு நியாயமா? என்று ஓபிஎஸ் மகன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்றதை கிண்டலடித்துள்ளார் தினகரன்.
அதிமுக சார்பில் மக்கள வைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் நேற்று முதல் விருப்ப மனு பெறப்படுகிறது. அதிமுக தலைமைக் கழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்களை வழங்கினர்.
அப்போது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், இபிஎஸ் மகன் மிதுன் ஆகியோர் தலை தலைமைக் கழகத்தில் தென்பட்டதை ஆச்சர்யமாகப் பார்த்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியிலும், இபிஎஸ் மகன் மிதுன் சேலம் தொகுதியிலும் போட்டியிட விரும்பமனு பெற்றுச் சென்றனர்.
ஏற்கனவே ஓபிஎஸ் மகனும், இபிஎஸ் மகனும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அரசல் புரசலாக செய்திகள் வெளியான நிலையில் இப்போது உண்மையாகிவிட்டது.
'அப் படின்னா குடும்பத்தின் பிடியில் இருந்து தர்மயுத்தம் நடத்தினது எல்லாம் சும்மா தானா? என்று தினகரன் கிண்டலடித்துள்ளார். ஊருக்கு ஒரு நியாயம்? ஓபிஎஸ்சுக்கு ஒரு நியாயமோ ? என்ற தினகரன், குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியைக் காப்பாற்றப் போகிறேன்னு முன்னாடி சொன்ன ஓ பிஎஸ்சின் நியாயத்தை மக்கள் பார்த்துக்கு வாங்க என்று காட்டமாகவும் கூறியுள்ளார்.