கூட்டணி பற்றி தொடர்ந்து பேசும் அன்புமணி... செம கடுப்பில் முதல்வர் எடப்பாடி தரப்பு!
திமுக, அதிமுகவோடு கூட்டணியா என்ற கேள்விக்கு நேற்று பதில் கொடுத்தார் அன்புமணி. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்போம் என்றார். அவரது இந்தக் குதர்க்கப் பேச்சு, எடப்பாடி தரப்பை உசுப்பேற்றியிருக்கிறது.
அன்புமணி பேச்சு பற்றி ஜி.கே.மணி வட்டாரத்திடம் பேசிய முதல் அமைச்சர் தரப்பினர், ' உங்களை கூட்டணிக்கு அழைத்தால் சுயமரியாதைக்கே இழுக்கு, நீங்கள் ஒரு ஜாதிக் கட்சி என முத்திரை குத்திவிட்டனர். அவர்கள் உங்களை மதிக்கவில்லை.
ஸ்டாலினைக் காரணம் காட்டி, எங்களை மிரட்டக் கூடிய வேலையைச் செய்ய வேண்டாம். வடக்கு மாவட்டங்களில் தினகரனை ஒன்றுமில்லாமல் செய்வதற்காகத்தான் உங்களைக் கூட்டணிக்கு அழைத்தோம். திருமாவளவனைக் கழட்டிவிட்டால் மட்டும்தான் நீங்கள் திமுகவோடு ஜோடி சேர முடியும்.
உங்களை அழைத்துப் பேசுவதால் எங்களை விவரம் இல்லாதவர்களாகப் பார்க்க வேண்டாம். கூட்டணி பற்றி அன்புமணி பேசும் வார்த்தைகளால் நமக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும். தேர்தல் தேதி அறிவிக்கும் வரையில் அமைதியாக இருங்கள்' என எச்சரித்தார்களாம்.