ஹெலிகாப்டர அனுமதிக்காட்டி கார்ல போறேன் - சாலை மார்க்கமாக மே.வங்கம் செல்லும் உ.பி.முதல்வர் !
மே.வங்கத்தில் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் ஹெலிகாப்டர் இறங்க அனுமதி மறுத்துவிட்டது மம்தா அரசு. இதனால் சாலை மார்க்கமாகவாவது செல்வேன் என யோகி பிடிவாதமாக காரில் செல்கிறார்.
முதலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் ஹெலிகாப்டருக்கும் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஞாயிறன்று உ.பி.முதல்வர் யோகி மே.வங்க மாநிலம் பலூர்சாட் என்ற இடத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. ஹெலிகாப்டர் இறங்க அனுமதிக்க முடியாது என்று மே.வங்க அரசு கூறிவிட்டதால் யோகி செல்ல முடியவில்லை. கடைசியில் அரசு போன் பேச்சு பொதுக் கூட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது.
இன்று புருலியா என்ற இடத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் செல்ல யோகிக்கு அனுமதியில்லை. விடாப்பிடியாக இந்த முறை மே.வங்கம் சென்றே தீருவது என்று யோகி முடிவெடுத்து விட்டார்.இதனால் அருகிலுள்ள பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ வரை ஹெலிகாப்டர் பயணம் அதன் பின் சாலை வழியாக புருலியா செல்கிறார் யோகி.
மம்தாவின் அராஜக ஆட்சிமே.வங்கத்தில் நடக்கிறது. தாகூர் பிறந்த புண்ணிய பூமியான வங்கத்துக்கு மம்தாவின் அராஜக பிடியிலிருந்து சுதந்திரம் தேவைப்படுகிறது என்று யோகி கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக உங்க மாநிலத்தின் லட்சணத்தைப் பாருங்கள். அங்கே தான் கொலை, கொள்ளை என நிலைமை மோசமாகிக் கிடக்குது. அதனால் உ.பி.யில் நீங்களே நின்றாலும் உபி. மக்கள் தோற்கடித்துவிடுவார்கள் என்று பதிலுக்கு மம்தா விமர்சித்துள்ளார்.