பேச்சுலர்ஸ் ஈசியா சமைக்கக்கூடிய பெப்பர் மட்டன் ரெசிபி

இன்னைக்கு நாம பேச்சுலர்ஸ் ஈசியா சமைக்கக்கூடிய பெப்பர் மட்டன் ரெசிபி எப்படி செய்றதுனு பார்க்க போறோம்.

தேவையான பொருட்கள்:

மட்டன்

நறுக்கிய வெங்காயம்

சீரகம் மற்றும் மிளகு தூள்

கடுகு

கறிவேப்பில்லை

செய்முறை:

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கொஞ்சம் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்த சீரகம் மற்றும் மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அத்துடன் மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்னர் குக்கர் மூடி போட்டு சுமார் 3 விசில் வரும் வரை வேக விடவும்.

மட்டன் வேக வேக தண்ணீர் வரும் என்பதால் கூடுதலாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை. விசில் அடங்கியதும் மட்டன் வெந்து இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும். தண்ணீர் நிறைய இருந்தால் கிரேவி பதத்திற்கு வரும் வரை 2 நிமிடம் சுண்ட விடவும்.

அவ்ளோதாங்க பேச்சிலர்ஸ் ஈசி பெப்பர் மட்டன் ரெசிபி ரெடி..!

இந்த ரெசிபியின் செய்முறையை பார்க்கணுமா..? கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யுங்கள்..

More News >>