ஸ்பைசி கடாய் காடை ப்ரை ரெசிபி!
அசைவப் பிரியர்களே உங்களுக்காக இன்னைக்கு கடாய் காடை ப்ரை ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கப் போறோம்..
தேவையான பொருட்கள்:
காடை
வெங்காயம்
தக்காளி
சீரகம்
மிளகு
இஞ்சி
பூண்டு
செய்முறை: முதலில் சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் சுத்தம் செய்த காடைகளை ஒவ்வொன்றாக எடுத்து உள் மற்றும் வெளிப் பகுதிகளில் அரைத்து வைத்த விழுதை தடவவும் .
இவ்வாறு செய்த பிறகு மசாலா தடவிய காடையை சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.அத்துடன் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
இதன்பிறகு மசாலா தடவி வைத்த காடையை ஒவ்வொன்றாக எடுத்து கடாயில் போடவும். பின்னர் இதன் மீது தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும்.
அதில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கிளறி விடவும். சிறிது நேரம் கழித்து காடையின் ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போடவும். காடை நன்றாக வெந்த பிறகு அதன் மீது கொத்தமல்லி தூவி 2 நிமிடத்தில் இறக்கி விடவும்.
அவ்ளோதாங்க ஸ்பைசியான கடாய் காடை ரெசிபி ரெடி..!
இந்த ரெசிபியின் செய்முறையை பார்க்கணுமா..? கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யுங்கள்..