ஆறு மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரை பார்க்கிறீர்களா? கண்ணீர் சுரப்பி பத்திரம்!
வேலைமேல் கவனம் குவிந்து போய் இருக்கும் நேரத்தில் வேறெதுவும் நம் நினைவுக்கு வராது.
கண்கள் கணினி திரையின்மீது பதிந்திருக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும். இமைக்காமல் உற்றுப் பார்த்து, சாப்பாட்டைக்கூட மறந்து, இருந்த இடத்தை விட்டு எழும்பாமல் போராடி கொண்டிருப்போம்.
வேலை முடியட்டும்; மேலாளர் பாராட்டட்டும்; சம்பள உயர்வு கிடைக்கட்டும். ஆனால், உடல்நலம்?
நாள்தோறும் ஆறு மணி நேரத்துக்குமேல் கணினிதிரையை பார்த்தபடி, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை செய்யும் மென்பொருள் துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. 22 முதல் 40 வயது வரையிலான அவர்களுள் 50 முதல் 60 விழுக்காட்டினருக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் என்னும் கணினி பார்வை குறைபாடு இருப்பது தெரிய வந்தது. ஓராண்டு காலம் 800 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அவர்களுள் பெரும்பான்மையோர் தொழில்நுட்ப வல்லுநர்கள். மெய்போமியன் சுரப்பி என்றறியப்படும் சிறிய சுரப்பிகளை (Meibomian gland dysfunction - MGD)எம்ஜிடி என்னும் குறைபாடு பாதிக்கிறது. இதனால், கண்ணீர் சுரப்பில் பாதிப்பு நேருகிறது.
அநேக அலுவலகங்கள் முற்றிலுமாக குளிரூட்டப்பட்டுள்ளன. ஈரப்பதத்தோடு கூடிய குறைந்த வெப்பநிலை நிலவும் அலுவலகங்கள் கண்களை இமைக்காமல் வேலை பார்ப்பது, கண்களை வறட்சியடைய செய்கிறது. கண்ணீர் சுரப்பி பாதிப்புறுவதால் இது நிகழ்கிறது. இப்பாதிப்பினால் அசதி, கண்களில் உறுத்தல், பார்வை மங்குதல், கண்கள் சிவத்தல், எரிச்சல் உணர்வு, அதிகப்படியான கண்ணீர் சுரப்பு, நிறங்களை பிரித்தறிவதில் சிக்கல் போன்ற பிரச்னைகள் நேரும்.
பணம் முக்கியம்; உடல்நலம் அதைவிட முக்கியம்! ஆகவே, அடிக்கடி கண்களை இமைத்துக் கொள்ளுங்கள். கணினி திரையை விட்டு அவ்வப்போது பார்வையை வேறிடத்துக்கு திருப்புங்கள். அலுவலகத்தை கவனித்துக்கொள்ள அநேகர் இருக்கிறோம்;