மக்களவைத் தேர்தல் முடியும் வரை ராமர் கோயில் குறித்த போராட்டங்கள் கிடையாது - விஸ்வ ஹிந்து பரிஷத் திடீர் முடிவு!

மக்களவைத் தேர்தல் முடியும் வரை ராம ஜென்ம பூமி விவகாரத்தை எழுப்பப் போவதில்லை, போராட்டங்களும் கிடையாது என விஸ்வ இந்து பரிஷத் திடீர் முடிவை அறிவித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் எல்லாம் ராமர் கோயில் விவகாரத்தை பாஜக கையில் எடுப்பதும், தேர்தல் ஆதாயம் தேட முயல்வதும் கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது வரும் மக்களவைத் தேர்தலிலும் ராமர் கோயில் விவகாரம் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உ.பி.யின் பிரயாக்ராஜில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் கூட்டத்தில், இன்னும் 4 மாதங்களுக்கு, அதாவது மக்களவைத் தேர்தல் முடியும் வரை ராமர் கோயில், ராம ஜென்ம பூமி விவகாரம் குறித்து எந்தப் பிரச்னையும் எழுப்புவதில்லை, போராட்டங்களும் கிடையாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அலோக்குமார் கூறுகையில், தேர்தல் நேரத்தில் ராமர் கோயில் பிரச்னையை எழுப்பி தேர்தலுக்காக மட்டமான அரசியல் நடத்துவதாக விமர்சனங்கள் எழுகிறது. சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி நில விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.இதனால் இந்த முறை தேர்தல் முடியும் வரை ராமர் கோயில் விவகாரத்தை எழுப்ப மாட்டோம். போராட்டங்களும் நடத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம் என்றார்.

More News >>