பேருந்து விபத்தில் சிக்கி 11 பேர் பலி: 44 பேர் படுகாயம்
அங்காரா: துருக்கியில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 44 பேர் படுகாயம் அடைந்தனர்.
மத்திய துருக்கி, எஸ்கிசேஹிர் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் புர்சா என்ற நகரம் உள்ளது. இங்குள்ள உளுதாக் ஸ்கீ என்ற ரிசார்ட்டில், விடுமுறையை களிப்பதற்காக சிலர் பேருந்தில் பயணித்தனர்.
அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த மரங்கள் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்தில் பயணித்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.