16 நாட்களுக்குப் பிறகு கிடைத்த க்ளூ - பெருங்குடி குப்பை கிடங்கில் உடல்பாகங்கள் கிடைத்த வழக்கில் புதிய திருப்பம்!

சென்னை பெருங்குடியில் குப்பை கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்பாகங்கள் யாருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன் ஜனவரி 21ம் தேதி சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில், துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் இரண்டு கால்கள், ஒரு கை கண்டெடுக்கப்பட்டன. அதேநேரம் அந்தப் பெண்ணின் தலை மற்றும் உடல் கிடைக்கவில்லை. இதனால் அப்பெண் யார் என கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடல் பாகங்களை மட்டும் வைத்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்.

ஆனால் அந்தப் பெண் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கில் போலீசாருக்கு கிடைத்த ஒரே க்ளூ அந்தப் பெண்ணின் கையில் வரையப்பட்டிருந்த டாட்டூ மட்டுமே. ஆனால் அதை வைத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பெண்ணின் கைரேகை மூலம் கண்டுபிடிக்க போலீசார் தரப்பில் இருந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கைகளில் இருந்த செல்கள் இறந்துவிட்டதால் அந்த முயற்சியும் தோல்வி அடைய போலீசார் கவலை அடைந்தனர்.

பல்வேறு முயற்சிகள் எடுத்தும் கண்டுபிடிக்க முடியாததால் மிகவும் சிக்கலான வழக்காக கருதப்பட்டது. இந்நிலையில் கிட்டத்தட்ட இரண்டு வார கால இடைவெளிக்கு பிறகு அந்த உடல்பாகங்கள் எந்தப் பெண்ணுக்கு உரியது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியாவின் உடல்பாகங்கள் அது என்றும் அவருக்கு வயது 38 என்றும் போலீசார் கூறியுள்ளனர். சந்தியா தனது கணவருடன் ஜாபர்கான் பேட்டையில் வசித்து வந்துள்ளார். அவரின் கணவரே சந்தியாவை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More News >>