நான் சொன்னது நடந்திடுச்சு... திருநாவுக்கரசர் தூக்கி அடிக்கப்பட்டதில் குஷ்பு செம குஷி
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதில் நடிகை குஷ்புதான் செம குஷியில் இருக்கிறாராம். சில மாதங்களுக்கு முன்னரே திருநாவுக்கரசர் நீக்கப்படுவார் என சொன்னது இப்போது நடந்துவிட்டது என நட்புவட்டாரங்களுக்கு போன் போட்டு மகிழ்கிறாராம் குஷ்பு.
திமுகவில் கருணாநிதியின் குட்புக்கில் இருந்த குஷ்புவால் ஏகப்பட்ட சர்ச்சைகள். ஸ்டாலின் கிச்சன் கேபினட் குஷ்புவை ஓரம்கட்டியது.
இதனால் திமுகவை விட்டு வெளியேறி காங்கிரஸில் ஐக்கியமாகி தேசிய அளவிலும் பதவி வாங்கி விட்டார் குஷ்பு. ஈவிகேஎஸ் இளங்கோவனின் படுதீவிரமான ஆதரவாளராக வலம் வந்தார் குஷ்பு.
ஒருகட்டத்தில் தலைவராக இருந்த திருநாவுக்கரசரை பகிரங்கமாகவே எதிர்த்தார் குஷ்பு. அத்துடன் திருநாவுக்கரசரை தலைவர் பதவியில் இருந்து தூக்க ராகுல் முடிவு செய்துவிட்டதாக 3 மாதங்களுக்கு முன்னரே குஷ்பு பொதுமேடையில் பேசினார்.
இதனால் குஷ்புவுக்கு எதிராக திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அதிரடியாக திருநாவுக்கரசர் தூக்கியடிக்கப்பட்டு கே.எஸ். அழகிரி தலைவராக்கப்பட்டார்.
இதனால் குஷ்பு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்... தமது நெருங்கிய வட்டாரங்களுக்கு போன் செய்து 3 மாதத்துக்கு முன்னரே நான் சொன்னது நடந்துவிட்டது அல்லவா? என மகிழ்ச்சி பொங்க பேசி வருகிறாராம்.
எழில் பிரதீபன்