நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா பந்துவீச்சு

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடர் இன்று ஆரம்பமானது. முதல் போட்டியில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் இன்று தொடங்கியது. வெலிங்டனில் நடைபெறும் முதல் போட்டியில் ஓய்வில் இருக்கும் இந்திய கேப்டன் கோஹ்லிக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பேற்றிருக்கும் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஒருநாள் தொடரை வென்றது போல் டி-20 தொடரையும் வெற்றிகரமாக இந்தியா கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.

  

More News >>