பெண்களை இழிவாக விமர்சித்த விவகாரம் : கரண் ஜோகர், பாண்ட் யா, ராகுல் மீது வழக்குப்பதிவு!
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் விமர்சித்த விவகாரத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியை நடத்திய பாலிவுட் நடிகர் கரண் ஜோகர், கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா, ராகுல் ஆகிய 3 பேர் மீதும் ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் காஃபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் பற்றிய தங்கள் அனுபவங்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா, ராகுல் இருவரும் ஜாலியாக அள்ளி விட்டனர். இது பெண்களை இழிவுபடுத்துவதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து உடளடியாக இருவரையும் சஸ்பென்ட் செய்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் போலீசில் மேஹ்வால் என்பவர் டிவி நிகழ்ச்சியை நடத்திய நடிகர் கரண் ஜோகர், பாண்ட்யா, ராகுல் ஆகியோர் மீது பெண்களை ஆபாசமாகவும், இழிவாகவும் பேசியதாக புகார் செய்ய, 3 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.