தினகரன் பிரிக்கப் போகும் வாக்குகள்? அச்சத்தில் திமுக, பாமக!

தேமுதிகவைத் தொடங்கிய காலகட்டத்தில் விருத்தாசலத்தில் மட்டும் வெற்றி பெற்று தனக்கான அரசியல் இடத்தை உறுதி செய்தார் விஜயகாந்த். அதே தேர்தலில் 8.33 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஒருசேர அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

பல தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் அதிமுக வீழ்ச்சியடைந்ததற்குக் காரணமாக விஜயகாந்த் இருந்தார். அதே வேலையை இப்போது தினகரன் செய்யப் போகிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

2016 சட்டமன்றத் தேர்தல் புள்ளிவிபரத்தின்படி பார்த்தால்கூட, இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது ஸ்டாலின்தான். சேலம், தருமபுரி ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர வடக்கில் வேறு எங்கும் பாதிப்பு வராது என திமுக தரப்பில் உறுதியாக நம்புகின்றனர்.

விஜயகாந்த்தைப் போல பாமக வாக்குகளை தினகரன் பிரிப்பார் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். பாமக வாக்குகளைப் பிரித்த கோபத்தில் பல வருடங்களாக விஜயகாந்தைத் திட்டித் தீர்த்தார் ராமதாஸ்.

இப்போது தினகரனின் வருகையால் பாமகவுக்கு நட்டமா? ஸ்டாலினுக்கு நட்டமா என பட்டிமன்றத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் வடபுல அரசியல் புள்ளிகள்.

அருள் திலீபன்

More News >>