தினகரன் எந்த கூட்டணிக்கு தாவுவாரோ? அச்சத்தில் விழிபிதுங்கம் பாஜக!

லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டு வருகின்றன. இதில் எடப்பாடி அண்ட் கோ பயப்படுவது தினகரன் எடுக்கப் போகும் நிலைப்பாட்டை நினைத்துத்தான்.

மோடியின் நடவடிக்கையால் சசிகலா குடும்பத்தையே தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள். ஆர்.கே.நகர் வெற்றியின் மூலமும் அமமுக செயல்பாட்டின் மூலமும் ஓரளவுக்கு தன்னை நிலைநிறுத்திவிட்டார் தினகரன்.

அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் வர இருக்கின்றன. திமுகவுக்கு எதிரான பிரமாண்ட அணியாக இதனைக் காட்டும் வேலைகள் நடக்க இருக்கின்றன.

இப்போது வரையில் எந்தக் கட்சியோடும் தினகரன் கூட்டணி வைக்கவில்லை. மாநிலக் கட்சிகள் சிலவற்றோடு பேசி வருகிறோம் என அவர் கூறினாலும், எந்தக் கட்சிகளும் அவரோடு அணி சேரும் முடிவில் இல்லை.

மக்களவைத் தேர்தலில் தனித்துவிடப்படுவார் என அதிமுக நினைக்கிறது. ஆனால், பிஜேபி தரப்பினரோ, ' தினகரன் தனித்து நின்றால்தான் நமக்கு வெற்றி. மோடி எதிர்ப்பு வாக்குகளை அவர் பிரிப்பதன் மூலம், திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குப் பல தொகுதிகளில் பலமான அடி விழும்.

நாம் கூட்டணி சேர்ந்த பிறகு அவர் திமுக அணிக்குச் சென்று 5 சீட்டுகளை வாங்கிவிட்டால், நம்முடைய கூட்டணிக்கான வெற்றி அதல பாதாளத்துக்குப் போய்விடும்' என அச்சத்தைத் தெரிவித்துள்ளனர். எடப்பாடியும் இதே யோசனையில் இருக்கிறாராம்.

-எழில் பிரதீபன்

More News >>