அமெரிக்கா ஸ்பெஷல் ஜம்போ இறால் மசாலா ரெசிபி..! (வீடியோ)

ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம அமெரிக்கா ஸ்பெஷல் ஜம்போ ஷ்ரிம்ப் (இறால்) மசாலா ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கப் போறோம்..

தேவையான பொருட்கள்:

இறால்

மஞ்சள்தூள்

இஞ்சி பூண்டு விழுது

கடுகு

கறிவேப்பிலை

சிவப்பு வெங்காயம்

மல்லி தூள்

மிளகாய் தூள்

உப்பு

செய்முறை:

ஒரு பானில் இறாலை போட்டு நன்றாக வதக்கவும். இறால் வதங்க வதங்க அதிலிருந்து தண்ணீர் வரும் என்பதால் கூடுதல் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

இந்த இறாலில் சிறிது மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் இருக்கும் தண்ணீர் சுண்டி இறால் பாதி வெந்ததும் இறக்கி விடவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின்னர் அரைத்து வைத்த சிவப்பு வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கிளறி கிரேவி பதம் வரும் வரை வதக்கவும்.

இதன் நிறம் மாறி கிரேவி பதத்திற்கு வந்தவுடன் அரை வேக்காட்டில் சமைத்து வைத்த இறாலை கிரேவியில் சேர்த்து கிளறவும்.

கிரேவியும் இறாலும் ஒன்றாக சேரும் வரை வதக்கினால் சூடான சுவையான அமெரிக்க ஸ்பெஷல் ஜம்போ இறால் மசாலா ரெசிபி ரெடி..!

இந்த ரெசிபியின் செய்முறையை பார்க்கணுமா..? கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யுங்க..

More News >>