`எல்லா காதலும் சில்லரைதனமானது தான் - வரவேற்பை பெறும் இஸ்பேட் ராஜா பட டிரெய்லர்!

நடிகர் ஹரீஷ் கல்யாணின் அடுத்தப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியை வைத்து புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்ஜித் ஜெயக்கொடியின் அடுத்த படம் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. பிக் பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணம் நாயகனாக நடிக்க, ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார். மாதவ் மீடியா என்ற நிறுவனம் தயாரிக்க சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இக்கால இளைஞர்களின் காதலும், அந்தக் காதலால் அவர்கள் சந்திக்கவும் பிரச்னைகளை மையமாக வைத்து படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஹரீஷ் கல்யாணுடன், விஜய் டிவி மா.கா.பா. ஆனந்த், காமெடி நடிகர் பால சரவணன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் ராம், கவுதம் மேனன், வெங்கட் பிரபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த டிரெய்லரை தங்கள் வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

More News >>