நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் செலரி ஜூஸ் ரெசிபி..! (வீடியோ)
ஹலோ ருச்சி கார்னர் நேயர்களே.. இன்னைக்கு நாம குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் சத்து தரக்கூடிய செலரி ஜூஸ் எப்படி செய்வதென்று பார்க்கப் போறோம்..
செலரி என்பது ஒருவகைச் செடி. வைட்டமின் k சத்து நிறைந்துள்ள இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். அதுமட்டுமின்றி கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புக்கும் பலம் தரும்.
சரி நாம இப்போ செலரி ஜூஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
செலரி
லெமன் ஜூஸ்
இஞ்சி
பச்சை மிளகாய்
கொத்துமல்லி
கறிவேப்பிலை
உப்பு
தண்ணீர்
செய்முறை:
மிக்ஸி ஜாரில் செலரி, இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, லெமன் ஜூஸ் ஆகியவை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அரை டம்ளர் தண்ணீரை அதனுடன் சேர்த்து மீண்டும் அரைக்கவும். பின்பு, இதனை வடிகட்டி சாறை மட்டும் தனியாக பிரித்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய செலரி ஜூஸ் பருக ரெடி..!
இந்த ரெசிபியின் செய்முறையை பார்க்கணுமா..? கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யுங்க..