அமிதாப் உடன் ஸ்டூல் போட்டு நடிக்கணும் - விமர்சனத்தை கண்டு கொள்ளாத சூர்யா [வீடியோ]
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சூர்யா வெளியாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து சூர்யா. செல்வராகவன் திரைப்படம் ஒன்றிலும், அமிதாப் பச்சனுடம் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
இதனையடுத்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பெண்கள் சூர்யாவை கிண்டல் செய்தனர். அவர், அனுஷ்காவுடன் நடிக்கையில் ‘ஹீல்ஸ்’ அணிந்து நடித்ததாகவும், அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்தால் நாற்காலி மீது ஏறி நின்றுதான் நடிக்க வேண்டும் என்று கிண்டல் செய்தனர்.
சூர்யா மீது தொடர்ந்து வரும் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும், பெண் தொகுப்பாளினியை அவரது ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நடிகர் சூர்யா, "தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற" என்று அவர் கூறியுள்ளார்.
சூர்யாவை கிண்டல் செய்த வீடியோ:
நன்றி : கோலிவுட் டைம்ஸ்