TN Budget 2019: சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்- லோக்சபா தேர்தலுக்காக ஏராளமான அறிவிப்புகள் இடம்பெறும்
தமிழக சட்டபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வரும் லோக்சபா தேர்தலை முன்வைத்து ஏராளமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
தமிழக சட்டசபையில் நடப்பாண்டு கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல்வர் எடப்பாடியின் உரையுடன் ஜனவரி 8-ந் தேதி சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டசபை நாளை கூடுகிறது. துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதே பாணியில் தமிழக பட்ஜெட்டிலும் அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.