நிதி மோசடி வழக்கு: சோனியா மருமகன் வதேரா 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு ஆஜர்
நிதி மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 2-வது நாளாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகிறார்,
மத்திய பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன. இதனை உடைப்பதில் மத்திய பாஜக அரசு படுதீவிரமாக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநில அரசுடன் சிபிஐ மோதலை தொடங்கியுள்ளது. அடுத்ததாக சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா மீதான நிதி மோசடி வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது.
டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு நேற்று வதேரா ஆஜரானார். அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக வதேரா ஆஜராகிறார்.
ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதை தடுக்கும் சதி இது என சாடியுள்ளார் மமதா.