இரட்டை இலை வழக்கு - வாபஸ் பெறுகிறாரா தினகரன்?

தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா?கிடைக்காதா? என்பது இரட்டை இலை சின்னத்துக்கான வழக்கின் முடிவைப் பொறுத்துதான் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை வழக்கை தொடர்ந்ததும் தினகரன் தான் என்பதால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா? பாதகமாக வருமா? என்ற விவாதங்கள் சூடாகியுள்ளது.

அதிமுகவில் இருந்து ஓ பிஎஸ் அணி பிரிந்த போது இரு அணிகளும் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடியதால் 2017-ல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் இரட்டை இலையை முடக்கியது தேர்தல் ஆணையம் .பின்னர் அணிகள் இணைந்தவுடன் மீண்டும் இரட்டை இலையை அதிமுகவுக்கு ஒதுக்கியது.

அப்போது தினகரன் இதனை எதிர்த்தார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 2017 நவம்பர் முதல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த வழக்கை 4 வாரத்திற்குள் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் குக்கர் சின்னத்தை தினகரனுக்கு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் கடந்த 3 மாதமாக கிடப்பில் உள்ள இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது.வழக்கு விசாரணை 4 வாரத்தில் முடிந்து விடுமா என்பது தினகரனின் முடிவைப் பொறுத்தே அமைய உள்ளது.

அதனால் வழக்கை வாபஸ் பெறுவாரா? அல்லது விசாரணை அதன் போக்கில் நடக்கட்டும் என்று முடிவு எடுப்பாரா? என்று விவாதங்கள் எழுந்துள்ளது.

 

More News >>