தொகுதிக்கு 35 சி! எடப்பாடியிடம் டிமாண்ட் வைத்த விஜயகாந்த் மச்சான் சுதீஷ்!
மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுக்கள் தொடங்கிய காலத்தில், தினகரனோடு கூட்டணி சேருவதை அதிகம் விரும்பினார் பிரேமலதா. தொகுதிகளுக்கு நல்லபடியாக அவர் செலவு செய்வார், நமக்கும் நெருக்கடிகள் இருக்காது என அவர் நம்பியதுதான் காரணம்.
ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய தலைகள், பணப் பிரச்னை காரணமாக வெளியேறுவதை அறிந்து தன்னுடைய முடிவை அவர் மாற்றிக் கொண்டார். இந்த நேரத்தில், சில மாநிலக் கட்சிகளோடு கூட்டணி தொடர்பாகப் பேசிக் கொண்டிருக்கிறோம் எனப் பேட்டியளித்தார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன்.
இதை உளவுத்துறை மூலமாக மோப்பம் பிடித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணிக்குள் தேமுதிகவை என்கேஜ் செய்தார். இதன் பின்னர், சுதீஷிடம் நேரடியாக பேசி வந்தார் எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவன்.
இந்தப் பேச்சுவார்த்தையில், தொகுதிக்கு 35 சி கொடுத்துவிடுங்கள். முதல்கட்டமாக 50 சி வேண்டும். மற்ற தொகுதிகளில் தேர்தல் வேலை பார்ப்பதற்கு தனியாக நிதி கொடுங்கள் என டிமாண்ட் வைத்தாராம். அவரது டிமாண்டுகளை நிறைவேற்றித் தருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பும் உறுதி கொடுத்துவிட்டதாம்.
-அருள் திலீபன்