திருமாவளவன் நம்பிக்கைக்குரியவர்.. ஸ்டாலினிடம் ரெக்கமண்ட் செய்த ராகுல்!
திமுக அணியில் இருந்து திருமாவளவனைக் கழட்டிவிடும் வேலைகள் நடப்பதை அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள்.
திமுகவோடு கூட்டணி இருக்கிறதா...இல்லையா என யூகமான பேச்சுக்கள் நடந்த காலகட்டத்தில், ஸ்டாலினுக்கே தெரியாமல் ராகுலை சந்தித்தார் திருமாவளவன்.
'இந்தியா முழுக்க எஸ்.சி இன மக்கள் உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களது வாக்குகள் உங்களுக்குத்தான் வந்து சேரும்' எனக் கூறி, தேசம் காப்போம் மாநாட்டுக்கும் ராகுலுக்கு அழைப்புவிடுத்தார் திருமாவளவன். அப்போதே திருமாவளவன் மீது கடும் எரிச்சலில் இருந்தார் ஸ்டாலின்.
இதையே காரணமாக வைத்து, திமுக மாசெக்கள் செயல்பட்டு வருவது பற்றி டெல்லிக்குப் புகார் பறந்துள்ளது. இதைப் பற்றி திமுக தலைமையிடம் பேசிய ராகுல் தரப்பினர், ' நமது அணிக்குள் விசிக கட்டாயம் இடம்பெற வேண்டும். எப்போதும் நமது நம்பிக்கைக்குரியவராக திருமாவளவன் இருப்பார்' எனப் பேசியுள்ளனர்.