#StopGenociderRajaPakshe ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு அழைத்த தி இந்து... சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு தி இந்து நாளேடு அழைத்து உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காரணமான மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சிங்களர் நுழைய இன்னமும் தடை இருக்கிறது.
இந்நிலையில் தி இந்து ஆங்கில நாளேடு மகிந்த ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு அழைத்துள்ளது. பெங்களூருவில் நாளை மறுநாள் இவ்விழா நடைபெற உள்ளது.
இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் #StopGenociderRajaPakshe என்ற ஹேஷ்டேக்குடன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.