விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்படும்- தமிழக பட்ஜெட் - Live Update

விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ10,000 கோடி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளுடன் தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழக நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

- தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.1% இருக்கும் என மதிப்பீடு

- தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.1லட்சத்து 42 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

- ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்

- கள்ளக்குறிச்சி மாவட்டம் விரைவில் உருவாக்கப்படும்

- மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும்

- தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை 3 லட்சத்து 97ஆயிரத்து 495 கோடி ரூபாய்.

- கடந்த ஆண்டை விட ரூ.42 ஆயிரம் கோடி அதிகம் - ஓபிஎஸ்.

நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14 ஆயிரத்து 319 கோடி .ரூ.43 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டம்

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

2019-20 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வாசித்து வருகிறார் ஓபிஎஸ்!

விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்படும் - பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தகவல்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.1% இருக்கும் என மதிப்பீடு - பட்ஜெட்டில் தகவல்.

தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.1லட்சத்து 42 ஆயிரமாக அதிகரித்துள்ளது -ஓபிஎஸ்

ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விரைவில் உருவாக்கப்படும் - பட்ஜெட்டில் ஓபிஎஸ்.தகவல்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு.

தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை 3 லட்சத்து 97ஆயிரத்து 495 கோடி ரூபாய். கடந்த ஆண்டை விட ரூ.42 ஆயிரம் கோடி அதிகம் - ஓபிஎஸ்.

நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14 ஆயிரத்து 319 கோடி .ரூ.43 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டம் - ஓபிஎஸ்

 

 

 

 

More News >>