அதிமுகவுக்கு ராமதாஸ் தேவையா? போர்க்கொடி தூக்கும் வடமாவட்ட மா.செக்கள்

அதிமுக கூட்டணியில் பாமகவைச் சேர்ப்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. வடக்கு மாவட்டங்களில் அதிமுகவின் வன்னிய மாவட்ட செயலாளர்களான கே.சி.வீரமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் கோலோச்சி வருகின்றனர்.

பாமகவைச் சேர்த்துக் கொண்டால், தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என அவர்கள் நினைக்கின்றனர். இதுதொடர்பாக கட்சித் தலைமையிடம் பேசிய சில மாவட்ட பொறுப்பாளர்கள், பா.ம.கவை பெயரளவுக்குக்கூட திமுக விரும்பவில்லை.

அவர்களை கூட்டணிக்குள் அழைப்பது சுயமரியாதைக்கே இழுக்கு என ஆ.ராசா திட்டித் தீர்த்த பிறகே வேறு வழியில்லாமல் நம் பக்கம் ராமதாஸ் வந்தார். இப்போதும் திமுகவிடம் இருந்து சிக்னல் வராதா? 3 சீட் கொடுக்க மாட்டார்களா என பேராசைப்படுகிறார் அன்புமணி.

அவர்களோடு கூட்டணி வைக்காமலேயே தலித், வன்னிய வாக்குகளை வாரிக் குவித்தார் அம்மா. நம்மோடு கூட்டணிக்கு வருவதால், அவர்கள் கேட்கும் சீட்டுகளை எல்லாம் கொடுக்க வேண்டிய நிலை வரும். பாமகவை ஒதுக்கிவிடுவதே நல்லது' எனக் கூறியுள்ளனர்.

இதற்குப் பதில் கொடுத்த ஓபிஎஸ், வடக்கில் நமக்கு பாமக தேவை. பா.ம.கவும் தினகரனும் கூட்டு சேர்ந்துவிட்டால், நாம் வெற்றி பெற முடியாது. இரண்டாவது இடமும் சிக்கலாகிவிடும். அதனால் பா.ம.க நம்மோடு இருப்பது நல்லதுதான் எனக் கூறியிருக்கிறார்.

- எழில் பிரதீபன்

More News >>