இரண்டாவது டி-20 போட்டி - இந்தியாவுக்கு 159 ரன் வெற்றி இலக்கு!
ஆக்லாந்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே ரன் எடுக்கத் திணறியது. முதல் போட்டியில் அதிரடி காட்டிய சே போர்ட் 12 ரன்களில் புவனேஷ்குமாரிடம் வீழ்ந்தார். அடுத்து முன்னணி வீரர்கள் முன்ரோ(12), மிட்செல் (1),வில்லியம்சன்(20) ஆகிய 3 பேரையும் அவுட்டாக்கி குருணால் பாண்ட்யா அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் நியூசிலாந்து அணியின் ரன்வேகம் குறைந்தது . 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கிராண்ட் ஹோம் 50 ரன் எடுத்தார்.
159 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது.