மோடி, அமித்ஷா, கட்கரி, யோகி ... தமிழகத்துக்கு படையெடுக்கும் பாஜக பெருந்தலைகள்!
நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகையைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாஜக பெருந்தலைகள் தமிழகம் படையெடுக்கின்றனர்.
பிரதமர் மோடி 10-ந் தேதி திருப்பூரில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 12-ந் தேதி உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் நெல்லை வருகிறார். 14-ந் தேதி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈரோடு வருகிறார். மீண்டும் 22-ந் தேதியும் அமித் ஷா ராமேஸ்வரம் வருகிறார்.
மத்திய அமைச்சரும் முக்கிய பாஜக தலைவர்களில் ஒருவருமான நிதின் கட்காரி 15-ந் தேதி சென்னை வருகிறார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பாஜக தலைவர்களின் தமிழக படையெடுப்புக்கு காரணம் அதிமுக கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெற நெருக்கடி தருவதற்குத்தான் என்றும் கூறப்படுகிறது.