நீல நிற சந்திர கிரகணத்தை பார்க்கணுமா? ஜனவரி 31ஆம் தேதிக்கு காத்திருங்கள்! - 150 ஆண்டுக்குப் பின் உதயம்

150 ஆண்டுகளுக்குப் பிறகு நீல நிறத்தில் முழு சந்திர கிரகணம், ஜனவரி 31ஆம் தேதி தோன்ற உள்ளது.

2018-ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு (Super Blue Blood) வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி முதல் தேதியில் ஒன்றும், ஜனவரி 31-ஆம் தேதி மற்றொன்றுமாக சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்ற உள்ளது.

ஜனவரி 1-ஆம் தேதி பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. ஜனவரி 31-ஆம் தேதியன்று பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் என்பதால் நீல நிலா தோன்ற உள்ளது.

2018-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இது. ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவில் இந்த முழு சந்திர கிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் அப்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.

அன்றைய தினத்தில் நிலா, பூமியின் மிக அருகில் இருக்கும். எப்போதும் காணப்படுவதை விட 30 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் வானில் தென்படும். அடுத்த முழு சந்திர கிரகணம் டிசம்பர் 31, 2028-இலும், அதற்கு அடுத்த முழு சந்திர கிரகணம் ஜனவரி 31, 2037-லும் நிகழ உள்ளன.

இந்த சந்திர கிரகணம் 7 மணி 37 நிமிடம் வரை முழுமையாக நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் கண்களால் கிரகணத்தை காண முடியும். இதுபோல ஒரு நீலநிற சந்திரகிரகணம் கடைசியாக மார்ச் 31, 1866-ஆம் ஆண்டு நிகழ்ந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News >>