ரஜினி மகள் சவுந்தர்யா திருமண வரவேற்பு விழா - விதைப்பந்து அன்பளிப்பு கொடுத்த ரஜினி!
ரஜினி மகள் சவுந்தர்யா திருமண வரவேற்பு விழாவில் விதைப்பந்து பார்சலை விருந்தினர் களுக்கு கொடுத்து அசத்தினார் ரஜினிகாந்த்.
ரஜினி மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் இன்று திருமண வரவேற்பு விழா நடந்தது. கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த வரவேற்பு விழாவில் ரஜினி குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு புதுமையாக விதைப்பந்து பார்சலை ரஜினி வழங்கினார். பார்சலின் மேல் பகுதியில் உள்ளே இருப்பது என்ன விதை என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.