இட்லி, தோசை மாவு அரைக்கும் முறை தெரியுமா ?

இட்லி, தோசை மாவு அரைக்கும் முறை எப்படின்னு பார்க்கப்போறோம்.

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - அரை கிலோ

உளுத்தம் பருப்பு - 100 கிராம்

வெந்தயம் - 1 ஸ்பூன்

செய்முறை:

முதலில் அரைகிலோ இட்லி அரிசியுடன் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊறவைக்கவும்.

மற்றொரு கிண்ணத்தில் 100 கிராம் உளுந்து ஊற வைக்கவும்.

இரண்டையும் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்த பிறகு உளுந்து தனியாகவும் அரிசி தனியாகவும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து சிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.

சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு மாவு தயார் ஆகிவிடும். ஒரே மாவில் இட்லியும் தோசையும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>