கண்டித்தும் திருந்தவில்லை-இரண்டாவது தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.காப்பாற்றிய #1098

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி சர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று போலீசில் ஒரு புகார் அளித்தார்.

 

அதில், "எனது தாய்க்கு 2 கணவர்கள். எனது தங்கை, நான், தாய் ஆகியோர் தாயின் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறோம். எனது 2வது தந்தை சமீபகாலமாக எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரின் சில்மிஷங்கள் குறித்து அம்மாவிடம் கூறினேன். அம்மா கண்டித்தும் தந்தை கேட்கவில்லை. தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரின் தொல்லை தாங்க முடியாமல் அரசின் 1098 எண்ணை தொடர்புகொண்டு குழந்தைகள் அமைப்பிடம் புகார் தெரிவித்து விட்டேன்"என்று கூறியுள்ளார்.

குழந்தைகள் அமைப்பு மூலம் விஷயம் உள்ளூர் காவல் நிலையத்துக்கு செல்ல அவர்கள் இதுகுறித்து சிறுமி வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது நடந்ததை சிறுமி விவரித்து புகாரை அளித்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் இரண்டாவது தந்தையிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>