சிகிச்சை முடிந்து அடுத்த வாரம் விஜயகாந்த் சென்னை திரும்புகிறார்
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீராத தொண்டை பிரச்சனையால் அமெரிக்காவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக சென்றார். சிறுநீரக பிரச்சனை, தொண்டை பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்றவர் உடல் நலம் தேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த வாரம் சென்னை திரும்புவார் என்றும் தெரிகிறது.
சென்னை திரும்பியவுடன் மக்களவை தேர்தல் பணிகள், யாருடன் கூட்டணி என்பது குறித்த கட்சி பணிகளில் விஜயகாந்த் முழுவீச்சில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. விஜயகாந்த் வருகை குறித்த தகவலால் தேமுதிவினர் உற்சாகமடைந்துள்ளனர்.