கரூர் மாவட்ட அமமுக பொருளாளர் திமுகவில் ஐக்கியம் !

செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து கரூர் மாவட்ட அமமுக பொருளாளராக இருந்து வந்த வி.ஜி.எஸ்.குமாரும் திமுகவில் இன்று இணைந்தார்.

கரூர் மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த செந்தில் பாலாஜி, அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததை மோப்பம் பிடித்து திமுக அமுக்கியது. தொடர்ந்து தன் செல்வாக்கை கரூரில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தி பல ஆயிரம் பேரை திமுகவில் இணைய வைத்தார்.

இதற்குப் பரிசாக கரூர் மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். தொடர்ந்து அமமுக மற்றும் அதிமுகவினரை திமுகவில் இணைய வைக்கும் முயற்சிகளை செந்தில் பாலாஜி ஈடுபட்டுள்ளார்.

இன்று அமமுக மாவட்ட பொருளாளர் வி.ஜி.எஸ்.குமாரை திமுகவுக்கு அழைத்து வந்துவிட்டார். சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் குமார் திமுக இணைந்தார்.

More News >>