பிரதமர் மோடியின் அருணாச்சல் விசிட்டுக்கு சீனா கடும் கண்டனம்!
அருணாச்சல பிரதேசத்தில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி பயணம் செய்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1962-ல் சீனாவுடன் யுத்தம் முடிந்த பிறகும் அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய - சீன எல்லைப் பகுதியில் இன்னும் சச்சரவு நீடிக்கிறது. 2017-ல் இந்திய எல்லைக்குள் சீனா ஊடுவ இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டு பதற்றம் ஏற்பட்டது.
அப்போது சீனாவுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இந்தியா எந்த புதிய திட்டங்களையும் துவங்கக் கூடாது என்று சீனா வலியுறுத்தியிருந்து.
இந்நிலையில் இன்று அருணாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.அதற்கு சீனா உடனடியாக கண்டனம் தெரிவித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறி பிரதமர் மோடி எல்லை மாநிலங்களில் திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை கடுமையாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்தள்ளதால் இரு நாடுகளின் உறவில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.