முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ரஜினி சந்திப்பு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் ரஜினி நேரில் சந்தித்து மகள் சவுந்தர்யா திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.
ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா-விசாகன் திருமணம் நாளை நடைபெறுகிறது. திருமண அழைப்பிதழ்களை அரசியல் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு ரஜினி வழங்கி வருகிறார்.
இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்த ரஜினி திருமண திருமண அழைப்பிதழ் கொடுத்தார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, திருமணத்திற்கு கட்டாயம் வருவதாக முதலமைச்சர் கூறியதாக தெரிவித்தார்.