அச்சச்சோ... வாத்தியார் பாக்குற வேலையா இது? மனைவி புகார்!
ஆபாச படங்களை பார்க்கும்படி கணவர் தன்னை கட்டாயப்படுத்துவதாக ஆசிரியர் ஒருவரின் மனைவி காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியை சேர்ந்தவர் கமலா. மைசூருவில் கல்லூரி ஒன்றில் படித்தபோது நண்பரானவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இத்தம்பதிக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. தற்போது கணவருக்கு 42 வயதாகிறது. அவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மனைவி கமலா, விற்பனை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கமலா, ஞாயிற்றுக்கிழமை இரவு நேரங்களில் தம்மிடம் தெரிவிக்காமல் வெளியில் சென்று விடுவதாகவும், அவருக்கு தவறான தொடர்பு இருப்பதை தாம் ஒரு கடிதம் மூலம் கண்டுபிடித்துள்ளதாகவும் கமலாவின் கணவரான ஆசிரியர், பெங்களூரு ஊரக பகுதியில் உள்ள நீலமங்கலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.கணவர் புகார் கொடுத்து இருவாரங்கள் கடந்த நிலையில் கமலா, தம் கணவர் ஆபாச காட்சிகளை பார்க்கும்படி தன்னை வற்புறுத்துவதாகவும், மறுத்ததால் தம்மை கடித்துக் காயப்படுத்தியுள்ளதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல் துறையினரின் விசாரணையின் போது, தம்பதியரின் ஒரு மகள், தாய்க்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக, மனைவி தங்க நகைகளை எடுத்துச் சென்று விட்டதாகவும், வீட்டில் சில சி.டிக்களை ஒளித்து வைத்து விட்டதாகவும் கணவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், கமலா அந்த நகைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.