திருப்பூரில் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ கைது, பல இடங்களில் மோதல்!

திருப்பூரில் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற வைகோ உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். கருப்புக் கொடி போராட்டம் நடத்தியவர்களுடன் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் மோதலில் ஈடுபட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே கருப்புக்கொடிகளுடன் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்கள் திரண்டனர். அப்போது திடீரென பாஜக மற்றும் இந்து அமைப்பினர் எதிர் கோஷம் போட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் உருவானது.

உடனடியாக போலீசார் பாஜக தரப்பினரை விரட்டியடித்ததுடன் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்டோரை கைது செய்ய முயன்றனர். அப்போது வைகோ முாண்டு பிடித்ததால் வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். இதை எதிர்த்து மதிமுக தொண்டர் ஒருவர் மின் டிரான்ஸ்பர்மரில் ஏறி போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

More News >>