திருப்பூரில் மதிமுகவினர் தாக்குதலில் காயமடைந்த பாஜக பெண் நிர்வாகி சசிகலா!
திருப்பூரில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து மதிமுகவினர் நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கூச்சல் போட்ட பாஜக பெண் நிர்வாகி தாக்கப்பட்டார்.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே வைகோ தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக மற்றும் இந்து அமைப்பினர் திரண்டு வந்து எதிர்க்கூச்சலில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது பாஜக மகளிரணி மாநில நிர்வாகியான சசிகலா வைகோவுக்கு எதிராக ஆவேச கூச்சலிட மதிமுகவினர் அவரை சரமாரியாக தாக்கியதில் காயமடைந்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவினர், வைகோ வைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.