மகள் திருமண அழைப்பிதழ்....ஸ்டாலினுக்கு ரிவீட் அடித்த ரஜினிகாந்த்!
ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவின் மறுமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழை கொடுக்க திமுக தலைவர் ஸ்டாலினை சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் சந்தித்தார்.
ரஜினிகாந்த்- ஸ்டாலின் சந்திப்பு தொடர்பான படங்கள், செய்திகள் இருதரப்பிலும் வெளியிடப்படவில்லை. ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோரை ரஜினிகாந்த் சந்தித்த படங்கள் மட்டும் வெளியாகி இருந்தன.
இது தொடர்பாக நாம் விசாரித்த போது, ஸ்டாலினுடனான சந்திப்பின் போது படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த படங்களை வெளியிடவும் வேண்டாம்.. செய்தியாக்கவும் வேண்டாம் என ரஜினிகாந்த் தரப்பில்தான் வலியுறுத்தப்பட்டதாம். இதனால்தான் திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் செய்தியும் வரவில்லை. படமும் இடம்பெறவில்லை என்கின்றன திமுக வட்டாரங்கள்.
ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் இது தொடர்பாக கேட்டபோது. திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோருடனான சந்திப்பு படத்தை வெளியிட ஓகே சொன்னதும் ரஜினிதான். ஸ்டாலினுடனான சந்திப்பை வெளியிட வேண்டாம் என்றதும் ரஜினிதான்.
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. தமது சந்திப்பை முன்வைத்து ஸ்டாலின் ஏதேனும் அரசியல் செய்யக் கூடும் என்கிற முன் எச்சரிக்கை ஒன்றாம். மற்றொன்று கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது தம்மை பத்தோடு பதினொன்றாக ஸ்டாலின் நடத்தினார். எந்த ஒரு தலைவருக்கும் தம்மை ஸ்டாலின் அறிமுகப்படுத்தவில்லை என்கிற ஆதங்கம்தான் இரண்டாவது. இதனால்தான் வேறு வழியே இல்லாமல் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் மட்டும் கொடுத்துவிட்டு போட்டோ ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றாராம்.
-எழில் பிரதீபன்