ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரதம்- மன்மோகன்சிங்,ராகுல் ஆதரவு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் தமது கட்சியினருடன் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை.

இதனால் பாஜகவுடனான கூட்டணியையும் தெலுங்குதேசம் முறித்துக் கொண்டது. மேலும் மத்திய அரசை கடுமையாக சந்திரபாபு நாயுடு விமர்சித்தும் வருகிறார்.

இந்நிலையில் ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் உள்ள ஆந்திரா பவனில் இன்று சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்குதேசம் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

More News >>