அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறலுக்கு அளவே இல்லை - பிறரை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தாராம் எம்ஜிஆர்!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உளறலுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தற்போது எம்ஜிஆர் பற்றியும் உளறிக் கொட்டி உளறல் மன்னன் பட்டத்தை தக்கவைத்து வருகிறார்.

ஜெயலலிதா இறந்தது முதலே திண்டுக்கல் சீனிவாசனின் உளறல் தொடர்கிறது . பிரதமர் மோடி என்பதற்குப் பதில் ஒரு தடவை மன்மோகன் சிங் பெயரையும் மற்றொரு தடவை வாஜ்பாய் பெயரையும் மாற்றி மாற்றிப் பேசினார்.

சமீபத்தில் ராஜீவ் கொலையில் ஜெயலலிதாவுக்குத் தொடர்பு இருப்பதாக கருணாநிதி குற்றம் சாட்டினார் என்றெல்லாம் அதிகபட்ச உளறல் சர்ச்சையானது. தற்போது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சரின் உளறலைக் கேட்டு கூட்டத்தினரே திகைத்துவிட்டனர்.

தமிழகத்தில் கல்வித்துறை வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் 28 லட்சம் ௹பாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். 28 லட்சத்தில் ஒரு சிறிய பள்ளிக் கட்டடம் தான் கட்ட முடியும் என்றார். அடுத்து கறவை மாடு ஒன்றின் விலை 500 ரூயாய் என்றார்.கூட்டத்தினரோ

ஒரு கறவை மாடு 500 ரூபாயா? 50 ஆயிரத்துக்குல விக்கிறது என திகைத்தனர். இதையெல்லாம் எழுதி வைத்திருந்த பேப்பரைத் தப்பும் தவறுமாக அமைச்சர் வாசித்தார்.

அடுத்து மற்றவர்களை குற்றம், குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர் என்று உளறலில் எம்ஜி ஆரையும் விடவில்லை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் . தேர்தல் நெருங்கும் நெருக்கடியான நேரத்தில் இன்னும் என்னென்ன உளறிக் கொட்டப் போகிறாரோ என்று அவரது ஆதரவாளர்களும், அதிமுகவினரும் உதறலில் உள்ளனர்.

 

More News >>