200 சி அட்வான்ஸ்- அதிமுக கூட்டணி பேரத்தை ஏற்றிய கட்சித் தலைவர்!

கூட்டணிப் பேச்சுவார்த்தையைவிடவும் அதிமுகவில் எவ்வளவு கொடுப்பார்கள் என்பதுதான் வடக்கில் வலிமையாக இருக்கும் கட்சியின் கேள்வியாக இருக்கிறது. ஆறு சீட்டுகளோடு ஒரு ராஜ்யசபா என்பதில் கறாராக இருக்கிறது அந்தக் கட்சி.

அதிமுகவோடு நடக்கும் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும் திமுகவும் எங்களோடு பேசுவதாகத் தகவல் பரப்பி வருகிறது. இதைப் பற்றி அக்கட்சியின் இளைஞரணியின் முக்கிய நிர்வாகியும், வடசென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரியப்படுத்தினார்.

இந்தப் பேட்டியை எடப்பாடி தரப்பு ரசிக்கவில்லையாம்.

இந்தப் பேட்டியால் கொந்தளித்த அதிமுக மாசெ ஒருவர், திமுகவும் அவர்களை வரவேற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

நம்மிடம் டிமாண்ட்டைக் காட்டி 200 சி பணத்தை அட்வான்ஸாக வாங்கிக் கொண்டனர். தொகுதிக்கு 35 கோடி என டிமாண்ட்டும் வைத்துள்ளனர். இத்தனையும் பேசி முடித்த பிறகு திமுகவோடு பேசுகிறோம் எனக் கூறுவது ஆரோக்கியமானது அல்ல,

இவர்களை அம்மா எந்த இடத்தில் வைத்திருந்தாரோ அதே இடத்தில் நாமும் வைத்திருக்க வேண்டும்' எனக் கோபப்பட, ' இப்போதுள்ள சூழலில் நம்மை விமர்சனம் செய்யாமல், நம்முடைய தலைமையை அவர்கள் ஏற்க வருகிறார்கள். இதைப் பற்றி வேறு எங்கும் பேசிவிட வேண்டாம்' என சமாதானப்படுத்தினாராம் ஆட்சித் தலைமையில் இருப்பவர்.

 

More News >>