பழைய பகையில் துரைமுருகன்! ஆதங்கத்தைக் கொட்டிய திருமாவளவன் !!

திமுக தலைமையிலான கூட்டணிக்குள் பாமக வருவது போன்ற தோற்றத்தை துரைமுருகனின் பேச்சு ஏற்படுத்திவிட்டதாகச் சொல்கின்றனர் திமுகவினர். அவரது இந்த முயற்சியால் கொதிப்பில் இருக்கிறார் திருமாவளவன்.

இதைப் பற்றி ஸ்டாலினுக்கு நெருக்கமான வாரிசு ஒருவரிடம் பேசிய விசிகவினர், மாற்றம் முன்னேற்றம் என்றெல்லாம் ஸ்டாலினுக்கு எதிராக 100 கோடி ரூபாயை செலவு செய்தவர் அன்புமணி. என்னோடு விவாதிக்கத் தயாரா என சவால்விட்டவர்.

இன்று காடுவெட்டி குரு குடும்பம் உட்பட வன்னிய மக்களே எதிர்ப்பு காட்டுவதால் கடந்த முறை போல தருமபுரியில் கூட ஜெயிக்க முடியாது என உணர்ந்துவிட்டார் ராமதாஸ். அதனால்தான் திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறோம் எனத் தகவல் பரப்புகிறார்.

தாலி, மனைவி உதாரணத்தை துரைமுருகன் சொல்கிறார். திமுகவில் உள்ள வடக்கு மண்டல மாவட்ட செயலாளர்கள் பலரும், சிறுத்தைகளை நம்மோடு வைத்துக் கொள்வோம் என ஸ்டாலினிடம் கூறிவிட்டனர்.

துரைமுருகன் பேசுவதற்குக் காரணம் பழைய பகைதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியை ரவிக்குமாருக்காகப் போராடி வாங்கினோம்.

அப்போதே, உங்களுக்கு ஒரு சீட்டே ஓவர் என நக்கல் அடித்தார் துரைமுருகன். அப்போதே அவரது கருத்தைக் கண்டித்தார் திருமா. இப்போது அதே சாதி பாசத்தில் ராமதாஸை நெருங்குகிறார்' என விளக்கியுள்ளனர்.

'துரைமுருகன் என்ன சொன்னாலும், அன்புமணியை மீண்டும் அணிக்குள் சேர்க்க மாட்டார் ஸ்டாலின். அது ஒரு சாதிக்கட்சி என ஆ.ராசா சொன்ன கருத்தில் அவர் உறுதியாக இருக்கிறார்' என விளக்கம் கொடுத்திருக்கிறார் வாரிசு.

 

More News >>