மொய், கிப்ட் எதுவும் வேண்டாம், தாமரைக்கு ஓட்டு போட்டா போதும் - மோடி வெறியரின் புதுமையான திருமண அழைப்பிதழ்!
திருமணத்திற்கு பணமாகவோ, பொருளாகவோ பரிசு எதுவும் வேண்டாம்.தாமரைக்கு ஓட்டுப் போடுவதே நீங்கள் கொடுக்கும் பரிசு என தமது திருமணத்திற்கான அழைப்பிதழில் புதுமை படைத்துள்ளார் மோடி வெறியர் ஒருவர்.
லோக்சபா தேர்தல் ஜுரம் அனைவரையும் பற்றிக் கொண்டு விட்டது. வாக்காளர்களை எப்படியெல்லாம் கவரலாம் என புதுசு புதுசா யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஐதராபாத்தைச் சேர்ந்த முகேஷ்ராவ் என்ற தீவிர மோடி வெறியர் தமது திருமண அழைப்பிதழையே பிரச்சார சாதனமாக மாற்றி விட்டார். அரசு ஊழியரான 27 வயது முகேஷ் ராவுக்கு வரும் 21-ந் தேதி நடக்கவுள்ள திருமணத்திற்கான அழைப்பிதழில்,பரிசு, பணம் எதுவும் வேண்டாம். பாஜகவின் தாமரைக்கு ஓட்டுப் போடுவதே நீங்கள் கொடுக்கும் திருமணப் பரிசு என்ற வாசகத்துடன் அழைப்பிதழ் அச்சிட்டு கொடுத்து வருகிறார்.
இந்த புதுமையான ஐடியாவுக்கு மகேஷ் குடும்பத்தினரும், மணமகள் வீட்டாரும் முதலில் சம்மதிக்கவில்லையாம். ஆனால் பிடிவாதம் பிடித்து சம்மதிக்க வைத்தாராம் மகேஷ் ராவ். இந்த அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.