பாரத ரத்னா விருது வேண்டாம் - அசாமின் பூபென் ஹசாரிகா குடும்பத்தினர் அறிவிப்பு!
குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு அறிவித்த பாரத ரத்னா விருதை ஏற்கப்போவதில்லை என மறைந்த அசாமிய பாடகர் பூபென் ஹசாரி கா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. அசாமில் தினமும் போராட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த வாரம் அசாம் சென்ற பிரதமர் மோடிக்கு செல்லும் இடமெல்லாம் நேருக்கு நேராக கருப்புக்கொடி காட்டி மாணவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் அசாமிய மொழி பாடகர் மறைந்த பூபென் ஹசாரிகா குடும்பத்தினரும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பாரத ரத்னா விருதை ஏற்கப் போவதில்லை என்றும் பூபென் ஹசாரிகா மகன் தேஸ் ஹசாரிகா அறிவித்துள்ளார்.