வங்காள விரிகுடாவில் இன்று காலை நிலநடுக்கம்- சென்னையும் குலுங்கியது!
வங்காள விரிகுடாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.
சென்னையில் இருந்து 609 கி.மீ தொலைவில் வங்கக் கடலில் கடலுக்கு அடியில் 10 கி.மீ தொலைவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் சென்னையின் டைடல் பார்க் உள்ளிட்ட சில இடங்களில் உணரப்பட்டது.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் ‘இன்னொரு சுனாமியா’ என அச்சத்துடன் பதிவிட்டனர். இந்த நிலநடுக்கம் அந்தமான் நிக்கோபர் தீவுகள் பகுதியில்தான் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.