ரஃபேல் விவகாரம்: அனில் அம்பானிக்கு தரகு வேலை பார்த்த பிரதமர் மோடி- ராகுல் செம தாக்கு

ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ‘தரகு’ வேலை பார்த்திருக்கிறார் பிரதமர் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஊழல் விவரங்கள் நாள்தோறும் வெளியாகி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சரை அனில் அம்பானி சந்தித்து பேசியதாக ஏர்பஸ் நிர்வாக இயக்குநர் இ மெயிலில் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கோ ராணுவ தளபதிக்கோ தெரியாது. ஆனால் அனில் அம்பானிக்கு மட்டும் எப்படி 10 நாட்களுக்கு முன்னரே தெரிந்தது?

பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை பிறரிடம் தெரிவிப்பது என்பது பிரதமராக பதவி ஏற்ற மோடி, அரசியல் சானத்தை மீறி நடந்து கொண்டார் என்பதையே வெளிப்படுத்துகிறது. அனில் அம்பானிக்காக இடைத்தரகராகவே பிரதமர் மோடி செயல்பட்டிருக்கிறார் என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

 

More News >>