முடியலடா சாமி.. வாட்ஸ் அப்பில் வலம் வரும் வைரல் பதிவு
பேருந்து கட்டண உயர்வு உள்பட மக்கள் படும் வேதனை குறித்து யாரோ ஒருவர் வாட்ஸ் அப்பில் பதிவிட்டு, அது தற்போது வைரலாகி வருகிறது..அந்த பதிவில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்போம்..
"பஸ்ல போனா பயண கட்டணத்தை பல மடங்கு உயர்த்துறாங்க..
பைக்ல போனா போலீஸ் தொல்லை இன்சூரன்ஸ்க்கு வருசாவருசம் ஆயிரம் ரூபாய் அழனும்..
கார்ல போனா வழிப்பறி கொள்ளையர்களைப்போல் 50 கி.மீ க்கு ஒரு கட்டணவசூல் மையம்..
பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு..
இது பத்தாதுனு ஜிஎஸ்டி 18% - 28%..
சம்பாதிக்கிற காசுல வேற வருமான வரி 30% வரை..
இதுல கார், பைக் வாங்குனா சாலை வரி, கட்டாய வாகன காப்பீடு..
இதையும் மீறி சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருந்தால் சொத்துக்கு வரி கட்டணும்..
ஒரு பக்கம் பேங்குல காசு போட்டாலும் சர்வைவ் கட்டணம் பணம் எடுத்தாலும் சேவை கட்டணம்..
ஏடிஎம் கார்டுக்கு வருசத்துக்கு பயன்பாடு கட்டணம்..
இருப்பு குறைந்தால் கட்டணம்..
செய்தி அனுப்ப கட்டணம்..
இப்படி எட்டு பக்கமும் பிச்சுப்புடுங்குற கூட்டத்துக்கு நடுவுல வாழுறோம்
இத விடவா வேற எதாச்சும் திருடன் வந்து நம்ம கிட்ட இருக்கறத திருடிற முடியும்.."
-யாரோ
இந்த பதிவு யாரோ ஒருவரால் பகிரப்பட்டு தற்போது பல்வேறு வாட்ஸ் ஆப் குரூப்பிலும் வைரலாகி வருகிறது..