பிரான் சம்பால் - இது புதுவகையான இறால் ரெசிபி..!
நேயர்களே.. இன்றைக்கு நாம் சம்பால் என்ற புது வகையான இறால் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம்.
தேவையான பொருட்கள்:
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன்
கால் லெமன் அளவு புளி
வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 50 கிராம்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
இறால் - 200 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
மல்லி தூள் - ஒன்றரை டீஸ்பூன்
குறிப்பு: மிளகாயை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறவைத்த மிளகாயை வெங்காயம், தக்காளி ஆகியவற்றுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
ஒரு பேனில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு, அரைத்து வைத்த கலவையை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இந்த கலவை சுண்டியதும் இறாலை சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறி வேக வைக்கவும்.
பின்னர், புளிக்கரைசல் சேர்த்து கிளறவும். ருசிக்காக ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
அவ்ளோதாங்க.. ருசியானபிரான் சம்பால் ரெசிபி ரெடி..!